சலேவிற்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்புக்காவல்

சுரேஷ் சலேவிற்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு

by Staff Writer 25-08-2026 | 4:04 PM

Colombo (News 1st) அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு மேலும் 90 நாட்களுக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் சலேவிற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு இன்றுடன்(25) நிறைவடைகிறது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளுக்கமைய, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சுரேஷ் சலேவை கைது செய்து விசாரணைக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுரேஷ் சலே கடந்த 78 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.