.webp)
-558120.jpg)
Colombo (News 1st) பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள நெல் களஞ்சியசாலைகளை இன்று (30) முதல் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தில் நெல் அறுவடை ஆரம்பமாகவுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இதுவரை 80 நெல் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நெல் களஞ்சியசாலைகளினூடாக 9,091 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட குறித்த நெல் தொகைக்காக 1,092 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் சமன் பாலித தெரிவித்துள்ளார்.
