தெஹிவளை துப்பாக்கிச்சூட்டின் சந்தேகநபர் கைது

தெஹிவளை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

by Staff Writer 27-07-2026 | 10:56 AM

COLOMBO (News 1st) 

தெஹிவளை - நிசல செவன பொது மயானத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹானை - தெல்கந்த பகுதியில் 07 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்திட்டிய பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தெஹிவளை - நிசல செவன பொது மயானத்தில் கடந்த 19ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த குற்றச்செயலானது வௌிநாட்டில் தங்கியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒருவரால் வழிநடத்தப்பட்டுள்ளமை சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றச்செயலுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட 200,000 ரூபா பணத்தில் 55,000 ரூபாவும் 03 கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண குற்றப்பிரிவு முன்னெடுத்துள்ளது.