.webp)
-557876.jpg)
Colombo (News 1st) வத்தளை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் கார், ஜா எல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜா-எல பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட நிலையில், குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை - பள்ளியாவத்தை பகுதியில் நேற்றிரவு(23) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
பள்ளியாவத்தை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
காரில் வந்ததாக சந்தேகிக்கப்படும் அடையாளந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொரளையைச் சேர்ந்த 39 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நிலவிய மோதல், இந்த கொலைக்கான காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
