இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு

இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு

by Staff Writer 21-06-2026 | 9:12 PM

Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 24ஆம் திகதி நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் இந்த பிரதிநிதிகள் குழு நாட்டில் தங்கியிருக்குமென சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுப் பிரதானி இவான் பபஜோர்ஜு (Evan Papageorgiou) தெரிவித்துள்ளார்.

நாட்டின் அண்மையக்கால பொருளாதார நிலைமைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் செயல்திறன் மீளாய்வு நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.