முதியோர் இல்லத்தில் தீ பரவல் : இன்று களப் பரிசோதனை

அங்குருவாதொட்ட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் களப் பரிசோதனை

by Staff Writer 04-06-2026 | 6:57 AM

Colombo (News 1st)  அங்குருவாதொட்ட, பட்டகொட முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான களப் பரிசோதனைகள் இன்று(04) காலை மேற்கொள்ளப்படவுள்ளன.

அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் மற்றும் ஹொரணை நீதவான் ஆகியோர் களப் பரிசோதனையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரணை - அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் நேற்று(03) பரவிய தீயில் சிக்கிய 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் 09 சடலங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.