.webp)

Colombo (News 1st) ஹொரணை - அங்குருவாதொட்ட, பட்டகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் இன்று(03) பரவிய தீயில் சிக்கிய 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் 09 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
முதியோர் இல்லத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்கு 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்தது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
