ரஷ்ய சுகாதார அமைச்சர் Mikhail Murashko இலங்கைக்கு வருகை

by Staff Writer 03-05-2026 | 6:33 PM

Colombo (News 1st) ரஷ்ய சுகாதார அமைச்சர் Mikhail Murashko உள்ளிட்ட தூது குழுவினர் 03 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(03) காலை நாட்டை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த தூதுக்குழுவினரை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர், பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan உள்ளிட்டோர் வரவேற்றனர்.

ரஷ்ய சுகாதார அமைச்சருடன் மேலும் 07 இராஜதந்திர அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர்.

இந்த தூதுக்குழுவினர் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படவுள்ளனர்.

தூதுக்குழுவினர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றையும் ஆய்வு செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.