வீட்டிற்கு தீ வைத்த உரிமையாளர் : மூவர் உயிரிழப்பு

வீட்டிற்கு தீ வைத்த உரிமையாளர் : வாடகைக்கிருந்த இருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு

by Staff Writer 19-04-2026 | 4:13 PM

Colombo (News 1st) மஹரகம - பமுனுவ பகுதியிலுள்ள வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தாய், மகள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.


தாய், தந்தை, மகள் என மூவரும் 02 மாடிகளை கொண்ட குறித்த வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.


வீட்டின் கீழ் மாடியிலிருந்த உரிமையாளர், வாடகைக்கு இருந்த குடும்பத்தினரை அங்கிருந்து வௌியேறுமாறு பல சந்தர்பங்களில் வலியுறுத்தியுள்ளார். எனினும், குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து வௌியேற மறுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இதன் காரணமாக கோபமடைந்த வீட்டின் உரிமையாளர் நேற்றிரவு(18) பெட்ரோல் ஊற்றி வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இதன்போது வீட்டில் இருந்த 55 வயதான தாய் மற்றும் 16 வயதான மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 


பலத்த தீ காயங்களுக்குள்ளான வீட்டின் உரிமையாளரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


சம்பவத்தில் காயமடைந்த தந்தை களுபோவில போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.