02 கடன் தவணைகளை ஒன்றாக வழங்குவதற்கு IMF இணக்கம்

02 கடன் தவணைகளை ஒன்றாக வழங்குவதற்கு IMF இணக்கம்

by Staff Writer 09-04-2026 | 12:12 PM

Colombo (News 1st) 02 கடன் தவணைகளை ஒன்றாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 05ஆம் மற்றும் 06ஆவது மீளாய்வுகளை ஒன்றாக நிறைவு செய்வதற்கான பொருளாதாரக் கொள்கை தொடர்பில் குறித்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழாம் மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையே ஊழியர் மட்ட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மீளாய்விற்கு சர்வதேச நாணய நிதிய நிறைவேற்று சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர், இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான நிதி வசதியை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.