தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 10 இந்திய மீனவர்கள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 10 இந்திய மீனவர்கள்

by Staff Writer 09-04-2026 | 11:58 AM

Colombo (News 1st) Sea of Sri Lanka கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்றிரவு(08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர், கொமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.

மீனவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea of Sri Lanka கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 19 படகுகளுடன் 129 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.