.webp)

Colombo (News 1st) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதி கருதி இன்று(09) முதல் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையினால் 1,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிவேக வீதிகளில் விசேடமாக மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் இலங்கை போக்குவரத்து சபையினால் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பஸ்களும் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று(09) முதல் விசேட ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
