.webp)

Colombo (News 1st) பதுளை - கிராந்துருகோட்டை, மஹியங்கனை - தெஹியத்தகண்டிய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 02 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
தெஹியத்தகண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்து சென்ற நபரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தெஹியத்தகண்டியவை சேர்ந்த 21 மற்றும் 23 வயதான 02 இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
