மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், வடமத்திய மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

by Staff Writer 05-04-2026 | 6:57 PM

Colombo (News 1st) மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், வடமத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்திற்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் இன்று(05) அறிக்கை வௌியிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இன்று 50 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி மாவட்டத்தின் கொலொன்ன மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.