''மே வரை எரிபொருள் கையிருப்பில்..''

மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பில் உள்ளது - பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

by Staff Writer 30-03-2026 | 5:48 PM

COLOMBO (News 1st) -  நாட்டில் எதிர்வரும் மே மாதம் வரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

முன்பதிவுகளுக்கமைய எரிபொருள் கிடைக்கப்பெற்று வருவதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள எரிபொருள் கையிருப்பை முகாமைத்துவம் செய்யும் நோக்கில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் QR  குறியீட்டு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் மயுர நெத்திகுமார தெரிவித்தார்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

நாளையும்(31) நாளை மறுதினமும்(01) ஒற்றை நாட்கள் என்பதனால் குறித்த நாட்களில் எரிபொருளை எவ்வாறு விநியோகப்பது என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(30) எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கூறினார்.

இதனிடையே, வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் 0,2,4,6 மற்றும் 8 ஆக காணப்படுமாயின் இரட்டை நாட்களிலும் 

1, 3, 5, 7 மற்றும் 9 ஆகிய ஒற்றை இலக்கங்கள் காணப்படுமாயின் ஒற்றை நாட்களிலும் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.