சுத்தமான குடிநீர் கனவை நனவாக்கிய கம்மெத்த

சுத்தமான குடிநீர் கனவை நனவாக்கிய கம்மெத்த

by Staff Writer 27-03-2026 | 6:05 PM

COLOMBO (News 1st) கம்மெத்தவின் மற்றுமொரு திட்டம் அனுராதபுரத்தை கேந்திரமாகக் கொண்டு நேற்று (27) முன்னெடுக்கப்பட்டது. 

அனுராதபுரம் கல்னேவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நேகம்பஹ நேகம சிறிசுமன வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. தரம் 1 முதல் 11 வரையான 165 மாணவர்கள் கல்வி பயிலும் சிறிசுமன வித்தியாலயம் அமைந்துள்ள நேகம்பஹ கிராமத்தில் சுமார் 170 குடும்பங்கள் வசிக்கின்றன. சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதை கனவாகக் கொண்டிருந்த இந்த மக்களுக்காக கம்மெத்தவின் ஸ்தாபகரும் கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர். ராஜமகேந்திரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு குடிநீர் திட்டத்துக்கு கம்மெத்தவால் அடிக்கல் நாட்டப்பட்டது.  கல்னேவ பிரதேச செயலாளர் டி.எம்.கே. ஆர் பிரியதர்சன, தம்புத்தேகம வலயக் கல்வி பணிப்பாளர், கெப்பிட்டல் மஹாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் மற்றும் கம்மெத்த தலைவர் ஷெவான் டெனியல், கம்மெத்த பொதுச் செயலாளர் பிரசன்ன அதுகோரள மற்றும் ஏனைய குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த குடிநீர் சுத்திகரிப்பு தொகுதிக்கு இலங்கை கடற்படை தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்குகிறது. கம்மெத்தவின் பொது நிதியம் குறித்த திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை வழங்குகின்றது.