செம்மணியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் செயற்பாடு

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் செயற்பாடு

by Staff Writer 09-02-2026 | 6:57 PM

Colombo (News 1st) செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்குள் தேங்கியுள்ள மழைநீரை முழுமையாக வௌியேற்றும் நடவடிக்கை நீதிமன்றத்தின் மேற்பார்வையுடன் இன்று(09) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - அரியாலை செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து அங்கு கட்டம் கட்டமாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அகழ்வு நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கில் மனித என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன் சான்றுப்பொருட்கள் பலவும் மீட்கப்பட்டிருந்தன.

மழைக்காலம் ஆரம்பித்த பின்னர் வெள்ளம் தேங்கியிருந்ததால் அகழ்வு பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து அங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி தொடர்பான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 16ஆம் திகதி இடம்பெறுமென அறிவிக்கப்பட்டது.
 

ஏனைய செய்திகள்