.webp)

Colombo (News 1st) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ இன்று(27) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் முன்னிலையாக முடியாதென அறிவித்துள்ளார்.
02 வார கால அவகாசம் வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களால் இன்று வருகை தர முடியாதுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் 'சிரிலிய' எனும் பெயரில் நடத்திச்செல்லப்பட்ட வங்கி கணக்கில் நிதி முறைகேடு இடம்பெற்றாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே ஷிரந்தி ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவுடன் காணப்பட்ட தொடர்புகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று(26) அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார்.
