அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்பம்

by Staff Writer 17-01-2026 | 3:47 PM

Colombo (News 1st)- தமிழர் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் உலக புகழ்பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (17) காலை ஆரம்பமானது. 

வீரர்கள் உறுதிமொழி ஏற்றதன் பிறகு வாடிவாசலில் கோவில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. 

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும் அவிழ்க்கப்பட்டு வருகின்றன. 

ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். 

போட்டியில் 1000 காளைகளும், 600 க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றுள்ளனர். 

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் நிலையில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு அவர் பரிசில்களையும் வழங்கிவைத்தார். 

போட்டியை காண அதிகாலை முதலே பல கிராமங்களில் இருந்தும் பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். 

பாதுகாப்பு பணிகளில் 3000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இதேவேளை, மதுரை மாவட்டத்தின் பாலமேடு ஜல்லிக்கட்டு நேற்று (16) ஆரம்பமானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.