.webp)
-552938.jpg)
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(12) உத்தரவிட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித்த ரம்புக்வெல்ல, அவரது மகள் அமாலி நயனிகா ரம்புக்வெல்ல, அவர்களது ஊழியர் நிபுனி கிருஷ்ணஜினா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சராக செயற்பட்ட காலத்தில் தனிப்பட்ட ஊழியர்களாக வௌிநபர்களின் பெயர்களை இணைத்து அவர்களின் சம்பளம், கொடுப்பனவுகளை தமது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டுள்ளதாக தெரிவித்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்து.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கடந்த நவம்பர் 17ஆம் திகதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ரொக்கப்பிணை மற்றும் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
