.webp)
-552944.jpg)
Colombo (News 1st) பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியின் முரசுமோட்டை பகுதியில் இன்று(12) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பஸ் மற்றும் கார் ஒன்றோடொன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
காரில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மூவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
