.webp)
-608044-552811.jpg)
Colombo (News 1st) மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை - கலகெதரவுக்கிடையேயான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த பகுதியின் நீளம் 19 கிலோமீற்றர்களாகும்.
இதன் நிர்மாணப்பணிகளை எதிர்வரும் மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் பொத்துஹர - ரம்புக்கனவுக்கிடையிலான பகுதியில் காப்பட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிர்மாணப்பணிகள் அனைத்தும் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் நிறைவு செய்யப்படவுள்ளன.
கடந்த 05 வருடங்களாக நிர்மாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் கடவத்த - மீரிகம பகுதியின் நிர்மாணப்பணிகள் தற்போது 40 வீதம் நிறைவடைந்துள்ளன.
நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 2028 ஆம் ஆண்டில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
