.webp)

Colombo (News 1st) அனர்த்த நிலைமைக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கையின் அவசர நிலைமையை நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அனுமதிக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர், கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், பொதுச்சேவைகளை முன்னெடுத்துச் செல்வதை நீடிப்பது பொருத்தமானது என பொதுமக்கள் அவசரகால வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மின்சாரம், எரிபொருள், சுகாதாரச்சேவை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நீர், உணவு, மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலம உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் , எம்பியூலன்ஸ், மத்திய வங்கி, அரச வங்கி மற்றும் காப்புறுதிச்சேவை , நீர்பாசனம், தொலைபேசி, தொலைத்தொடர்பு மற்றும் ஊடகம் , தாழ்வான பகுதிகளை மீட்டெடுத்தல், விவசாயம் மற்றும் விவசாய காப்புறுதி ஆகிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற வாரத்தில் குறித்த வர்த்தமானிகள் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.
