டக்ளஸ் தேவானந்தா தடுப்புக்காவலில் விசாரணை

டக்ளஸ் தேவானந்தா 3 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணை

by Staff Writer 27-12-2025 | 7:36 PM

Colombo (News 1st) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று(26) சென்றிருந்த போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அவருக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் கைத்துப்பாக்கியொன்று 2019 ஆம் ஆண்டு வெலிவேரியவில் கால்வாய் ஒன்றுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் மாகந்துரே மதூஷ் வழங்கிய தகவலுக்கு அமையயே குறித்த இடத்தில் இருந்து துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட் கொலை விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னரே டக்ளஸ் தேவானந்தா நேற்று கைது செய்யப்பட்டார்.