.webp)

Colombo (News 1st) வடக்கு பாணந்துறை பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் Facebook ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் நால்வர் திருட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனையவர்களிடமிருந்து தலா 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை, கேகாலை, பதுளை மற்றும் தெஹிவளை பகுதிகளை சேர்ந்தவர்களாவார்.
