.webp)

Colombo (News 1st) சிலாபம் - தெதுரு ஓயாவிற்கு நீராடச்சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் சிலர் இன்று(05) மாலை தெதுரு ஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளனர்.
கிரிபத்கொடையிலிருந்து சுற்றுலா சென்ற இளைஞர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
