துசித ஹல்லொலுவ பிணையில் விடுவிப்பு

துசித ஹல்லொலுவ பிணையில் விடுவிப்பு

by Staff Writer 18-09-2025 | 2:42 PM

Colombo (News 1st) தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று(18) உத்தரவிட்டார்.

சந்தேகநபர் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

வௌிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

துசித ஹல்லொலுவ கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி கொழும்பு குற்றப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த மே 17ஆம் திகதி நாராஹேன்பிட்டி பகுதியில் அவர் பயணித்த கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.