.webp)
Colombo (News 1st) திருகோணமலை கடற்பகுதியை அண்மித்து 3.9 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
இன்று(18) மாலை 04.06 அளவில் நிலஅதிர்வு பதிவாகியதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
பல்லேகெல, ஹக்மனை மற்றும் மஹகனதராவ ஆகிய நிலஅதிர்வு கண்காணிப்பு மத்திய நிலையங்களிலும் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மக்களுக்கும் நிலஅதிர்வை உணரக்கூடியதாக இருந்ததாக நியூஸ் ஃபெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.