தங்காலையில் கைக்குண்டு கண்டுபிடிப்பு

தங்காலை - நெட்டொல்பிட்டியில் கைக்குண்டு கண்டுபிடிப்பு

by Staff Writer 18-09-2025 | 2:54 PM

Colombo (News 1st) தங்காலை - நெடொல்பிட்டி பகுதியிலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெண்ணொருவருக்கு சொந்தமான காணியொன்றின் எல்லைக் கல்லை நடுவதற்காக குழி தோண்டும் போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.