வேன் - லொறி மோதி விபத்து: ​35 வயது பெண் உயிரிழப்பு

தெற்கு அதிவேக வீதியில் வேன் - லொறி மோதி விபத்து : ​35 வயது பெண் உயிரிழப்பு

by Staff Writer 16-09-2025 | 3:21 PM

Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் இன்று(16) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06 பேர் காயமடைந்துள்ளனர்.

கெலனிகம மற்றும் கஹதுடுவ இடைமாறல் பகுதிகளுக்கு இடையே காலியிலிருந்து கடவத்தை நோக்கி பயணித்த வேன் முன்னால் சென்ற லொறியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த 04 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும் 03 சிறுவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 35 வயதுடைய வீரபான பகுதியைச் சேர்ந்த பெண்ணே விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.