அரச நிறுவனங்களில் டிஜிட்டல் கையொப்பமிட சந்தர்ப்பம்

அரச நிறுவனங்களில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது டிஜிட்டல் கையொப்பமிட சந்தர்ப்பம்

by Staff Writer 16-09-2025 | 3:30 PM

Colombo (News 1st)  அரச நிறுவனங்களில் பொதுமக்கள் ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது கையொப்பமிடுதல் டிஜிட்டல் மயமாக்கப்படுவதாக பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

கிராம உத்தியோகத்தர் முதல் பொதுநிர்வாக அமைச்சு வரை பொதுமக்கள் எழுத்துமூல ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது கையொப்பமிடும் செயற்பாடு டிஜிட்டல் மயப்படுத்தப்படும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது 25 மாவட்ட செயலகங்களிலும் 25 பிரதேச செயலகங்களிலும் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பிரதேச செயலகங்களிலும் எதிர்வரும் காலத்தில் குறித்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.