வென்னப்புவ துப்பாக்கிச்சூடு;3 சந்தேகநபர்கள் கைது

வென்னப்புவ துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் 03 சந்தேகநபர்கள் கைது

by Staff Writer 01-09-2025 | 11:31 AM

வென்னப்புவ பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவருக்கு காயமேற்படுத்திய சம்பவம் தொடர்பாக 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி, வாள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

காரில் வந்த 03 பேர் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

கூரிய ஆயுதங்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லுணுவில பகுதியைச் சேர்ந்த 35 வயதுடை நபரே சம்பவத்தில் உயிரிழந்தார்.

காயமடைந்த 36 வயதுடைய நபர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் மேல் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனைக்காக கையொப்பமிட பொலிஸ் நிலையத்திற்கு சென்று வௌியேறும் சந்தர்ப்பத்தில் காரில் பயணித்த இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த விவகாரம் குறித்து 03 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.