ராஜித, லான்சாவிற்கு வீட்டிலிருந்து உணவு ..

ராஜித, லான்சாவிற்கு வீட்டிலிருந்து உணவு கொண்டுவர அனுமதி

by Staff Writer 01-09-2025 | 11:25 AM

ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இருவரும் முன்வைத்த கோரிக்கைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டமொன்றை கொரிய நிறுவனமொன்றுக்கு  வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 2 கோடி ரூபாவுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நீர்கொழும்பு நகர சபை உப தலைவரின் வீட்டின் மீது  தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.