.webp)
Colombo (News 1st) முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹர நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றை போலி உறுதிப்பத்திரத்தை தயாரித்து விற்பனை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.