விசேட சுற்றிவளைப்புகளில் 609 பேர் கைது

விசேட சுற்றிவளைப்புகளில் 609 பேர் கைது

by Staff Writer 17-08-2025 | 5:08 PM

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் சந்தேகத்தின் பேரில் 609 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 26,607 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 243 பேரும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 196 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.