இந்தியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை..

தீர்வை வரி தொடர்பில் இந்தியாவிற்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை..

by Staff Writer 06-08-2025 | 1:15 PM

இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் அதிகரிக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, ரஷ்யாவிலிருந்து தொடர்ந்தும் மசகு எண்ணெய் கொள்வனவு செய்கின்றமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

ரஷ்யாவிலிருந்து தொடர்ந்தும் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யவுள்ளதாக இந்தியா அண்மையில் அறிவித்திருந்தது.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு கடந்த ஜூலை மாதம் 25% தீர்வை வரி விதிக்கப்பட்டது.

அத்துடன், யுக்ரேனுடனான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவிக்காவிட்டால் ரஷ்யாவுடன் பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு 100% வரை வரிகளை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்த அறிப்பை தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் கொள்வனைவை நிறுத்தின.

இந்நிலையிலேயே, இந்தியா ரஷ்யாவிலிருந்து தொடர்ந்தும் எண்ணெய் கொள்வனவு செய்வதாக அறிவித்தது.

மேலும் இந்தியா ரஷ்யாவிலிருந்து தொடர்ந்தும் மசகு எண்ணெய் கொள்வனவு செய்து சந்தையில் அதிக இலாபத்திற்கு விற்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தேசிய நலன்களையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

ஏனைய செய்திகள்