பொரளை வாகன விபத்து ; சாரதி விளக்கமறியலில்..

பொரளை வாகன விபத்து ; சாரதி விளக்கமறியலில்..

by Staff Writer 29-07-2025 | 4:43 PM

Colombo (News 1st) பொரளை பொதுமயான சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துடன் தொடர்புடைய சாரதியை எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று(29) கொழும்பு நீதவான் M.N.ரிஷ்வான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று(28) காலை பொரளை பொதுமயான சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 07 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாரந்தூக்கி வாகனம் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் ஜீப் வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளானது.

விபத்தின் போது சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.