.webp)
Colombo (News 1st) நாட்டில் கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கு TikTok நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
TikTok நிறுவனத்தின் தெற்காசியாவிற்கான அரச தொடர்பாடல் தலைவர் மற்றும் தெற்காசியாவிற்கான பொதுமக்கள் விவகாரத் தலைவர் அல் மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கல்வி தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக விதிமுறைகள், ஆராய்ச்சி மற்றும் பாடத்திட்டங்களில் தேவையான திருத்தங்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தை TikTok பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
கல்வித்துறையில் முன்னெடுக்கப்படும் சீர்திருத்தங்களுடன் இவ்வாறான ஒத்துழைப்புகளை பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறையை விரைவாக செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.