இலங்கையில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணங்கள்

இலங்கையில் இன்று முதல் புதிய பேருந்து கட்டணங்கள்

by Staff Writer 04-07-2025 | 4:11 PM


 

0.55 வீதத்தால் குறைக்கப்பட்ட பஸ் கட்டணம் இன்று(04) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஆரம்பக் கட்டணமான 27 ரூபாவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

2 ஆவது கட்டணமான 35 ரூபா மற்றும் 3ஆவது கட்டணமான 45 ரூபா ஆகியவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏனைய பஸ் கட்டண படிமுறைகளுக்கமைய 01 ரூபா, 02 ரூபா, 03 ரூபா மற்றும் 04 ரூபா அளவில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

அதிகபட்ச பஸ் கட்டணமான 2,170 ரூபா கட்டணம் 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய கட்டணம் 2,159 ரூபாவாகும்.

வருடாந்த பஸ் கட்டண திருத்தங்களுக்கு அமைய 2.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், அண்மையில் எரிபொருள் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பஸ் கட்டணத்தை குறைக்கும் வீதம் மறுசீரமைக்கப்பட்டது.