உர மோசடி தொடர்பில் விசாரணை

உர மோசடி தொடர்பில் விசாரணை

by Staff Writer 16-05-2025 | 10:03 AM

Colombo (News1st) தரம் குறைந்த உரம் சந்தையில் காணப்படுகிறதா என கண்டறிவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்தது.

பொலன்னறுவை பகுதியில் தரம் குறைந்த உரம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமையை அடுத்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே குறிப்பிட்டார்.

மாவட்ட உதவி பணிப்பாளர்களின் ஊாடாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை, சிறிபுர பகுதியிலுள்ள களஞ்சியசாலையொன்றில் இருந்து 1,565 யூரியா உர மூட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

குறித்த உர தொகையின் மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே குறிப்பிட்டார்.

குறித்த உர மோசடி தொடர்பில் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்