இலங்கை அரசாங்கம் - இந்தியாவின் எக்ஸிம் வங்கி இடையே இணக்கப்பாடு

by Staff Writer 15-05-2025 | 11:43 AM

Colombo (News 1st) கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் கீழ் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் எக்ஸிம் வங்கி(EXIM Bank) இடையே இருதரப்பு திருத்தப்பட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

கடன் வசதி மற்றும் கடன் பெறுவதற்கான வசதி தொடர்பிலேயே இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படுகின்றமை இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் முக்கியமான நடவடிக்கையாக அமையுமென நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி மற்றும் கடந்த 3ஆம் திகதிகளில் இந்த இருதரப்பு திருத்தப்பட்ட உடன்படிக்கைகள்   கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதனூடாக இந்திய அரசாங்கத்துடன் 930.8 மில்லியன் டொலர் பெறுமதியான 8 கடன் வசதிகள் மற்றும் 4 கொள்வனவு கடன் வசதிகள் தொடர்பான உடன்படிக்கைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.