மாதுரு ஓயா விமான விபத்து ; கள ஆய்வு ஆரம்பம்

மாதுரு ஓயாவில் விபத்திற்குள்ளான விமானம் ; கள ஆய்வு ஆரம்பம்

by Staff Writer 11-05-2025 | 4:41 PM

Colombo (News 1st)  மாதுரு ஓயாவில் வீழ்ந்து விபத்திற்குள்ளான பெல் 212 ரக ஹெலிகொப்டர் கட்டுநாயக்க விமானப்படை பொறியியலாளர் பிரிவில் கையளிக்கப்படவுள்ளது.

அடுத்தகட்ட விசாரணைகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

விமானம் வீழ்ந்து விபத்திற்குள்ளானமை தொடர்பான கள ஆய்வு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக விமானப்படை தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ள 09 பேரடங்கிய குழுவினால் கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.