.webp)
தமது இராணுவ தளங்களை இலக்குவைத்து இந்தியா ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று(10) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் தலைநகர் இஸ்லாமபாத் உள்ளிட்ட 2 பகுதிகளிலுள்ள இராணுவத் தளங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.
எனினும் பாகிஸ்தான் இராணுவத்தினரால் குறித்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஒபரேஷன் சிந்தூர் தாக்குதலையடுத்து 2 நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தாக்குதல்களில் இதுவரை 36 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்களால் இதுவரை 16 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள 32 விமான நிலையங்கள் எதிர்வரும் மே 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதுமுள்ள 32 விமான நிலையங்களிலுள்ள அனைத்து சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.