.webp)
Colombo (News 1st) வாகன இறக்குமதி தொடர்பில் அமுலிலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று(08) நடைபெறவுள்ளது.
சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30க்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஏப்ரல் 29ஆம்திகதி வௌியிடப்பட்டது.
இதனிடையே, உத்தேச தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டமூலம் அனுமதிக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நவீன தேவைகளின் அடிப்படையில் பல திருத்தங்கள் குறித்த சட்டமூலத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளர் நாயகம் நியோமி ஜயவர்தன தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகள், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளின் கட்டணங்களை ஒழுங்குபடுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.