.webp)
Colombo(News1st) இம்முறை உலக அழகிப் போட்டி இந்தியாவின் ஹைதராபாத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் ஆரம்பமாகும் 72ஆவது உலக அழகிப் போட்டி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்கவுள்ளனர்.
ஹைதராபாத் கச்சிபவுலி விளையாட்டு அரங்கில் மாநில சுற்றுலாத்துறை சார்பில் தொடக்க விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தெலங்கானா பாரம்பரிய நடனங்கள் இடம்பெறவுள்ளன.