ட்ரம்ப்பின் கோரிக்கை- நிராகரித்த மெக்ஸிகோ ஜனாதிபதி

ட்ரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்த மெக்ஸிகோ ஜனாதிபதி

by Staff Writer 04-05-2025 | 3:49 PM

Colombo(News1st) அமெரிக்க இராணுவத்தினரை தமது நாட்டிற்குள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என மெக்ஸிகோ ஜனாதிபதி Claudia Sheinbaum தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை தாம் நிராகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் திட்டமிட்ட குற்றங்களை எதிர்த்து போராட எவ்வாறு உதவ முடியுமென ட்ரம்ப் கேட்டுக்கொண்டதாகவும் அமெரிக்க இராணுவத்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்ததாகவும் பரிந்துரையை தாம் நிராகரித்ததாகவும் மெக்ஸிகோ ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.