.webp)
Colombo (News 1st) பாணந்துறை - ஹிரண பகுதியில் இன்று(29) அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் 20 வயதான இளைஞரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹிரண பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது குறித்த வீட்டில் சிலர் விருந்துபசாரத்தில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.