GSPPLUS மீளாய்விற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

GSP PLUS மீளாய்விற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

by Staff Writer 28-04-2025 | 10:44 AM

Colombo (News1st) ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ கண்காணிப்பு செயற்றிட்டக்குழு இலங்கைக்கு இன்று(28) வருகை தரவுள்ளது.

இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைகள் தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதே குறித்த குழுவின் நோக்கமாகும்.

இந்தக் குழுவினர்  எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.