உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு ..

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு இன்றும்..

by Staff Writer 28-04-2025 | 11:23 AM

Colombo (News1st)உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும்(28) இடம்பெறுகின்றது.

இன்று(28) முற்பகல் 08.30 முதல் பிற்பகல் 04.15 வரை தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும்.

இன்றைய தினம் தமது வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு நாளையும் அதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த 2 நாட்களைத் தவிர தபால்மூல வாக்களிப்புக்காக வேறு நாட்கள் ஒதுக்கப்பட மாட்டாது என அவர் கூறினார்.