.webp)
Colombo(News1st) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று(28) முற்பகல் 9.30 அளவில் முன்னிலையானார்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்து முன்வைத்த கருத்துக்கள் தொடர்பாக விளக்கமளிப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இதற்கு முன்னர் 2 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த 2 சந்தர்ப்பங்களிலும் வேறு திகதிகளை வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமது சட்டத்தரணியின் ஊடாக கடிதமொன்றை அனுப்பி முன்வைத்த கோரிக்கைக்கமைய அவர் இன்று(28) ஆணைக்குழுவில் முன்னிலையானார்.